#image_title
வழக்கமாக தன்னுடைய படங்களில் புதுமுக நடிகர்களையே நடிக்கவைத்து வந்து பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்துக்கு அந்த பாத்திரத்தை உணர்ந்து நடிக்க வேண்டிய ஒரு நடிகர் தேவை என்பதால் சிவாஜி கணேசனை தேடிச் சென்றார்.
அந்த படத்தில் இருந்த வயதான ஆணுக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இடையிலான அன்பை களங்கமில்லாமல் சொல்லியிருந்தார். அந்த படத்தில் மலைச்சாமி என்ற கதாபாத்திரத்துக்கு தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் உயிர் கொடுத்திருந்தார் சிவாஜி கணேசன். அதுவரை சிவாஜியின் நடிப்பை ஓவர் ஆக்டிங் என சொன்னவர்களுக்கு பதிலளிப்பது போல இருந்தது அந்த படத்தில் சிவாஜியின் நடிப்பு.
இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் பின்னணி இசைக்கோர்ப்புக்காக தனது நண்பரும் ஆஸ்தான இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கு போட்டுக்காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த இளையராஜாவுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதைப் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பாரதிராஜாவிடம் நேரடியாகவே சொல்லிவிட்டாராம்.
பாரதிராஜாவிடம் “இந்த படம் ஓடாது. அதனால் இந்த படத்துக்கு எனக்கு சம்பளம் வேண்டாம்.” என சொல்லியுள்ளார். இளையராஜா இப்படி சொல்லிவிட்டாரே என்ற தயக்கத்தில் இருந்துள்ளார். ஆனாலும் தனக்கு பிடிக்காத படத்துக்கும் மிகச்சிறப்பான பின்னணி இசையை அமைத்துக்கொடுத்துள்ளார்.
#image_title
ஒருக் காட்சியில் இளையராஜாவின் இசையமைத்ததைப் பார்த்துவிட்டு பாரதிராஜா எமோஷனல் ஆகிவிட்டாராம். இளையராஜாவின் கையைப் பிடித்துக் கொண்டு “உனக்குப் பிடிக்காத ஒரு படத்துக்கே இப்படி இசையமைச்சிருக்கியேடா” எனக் கூறினாராம்.
அதற்கு இளையராஜா “உன்னுடைய படம் எனக்குப் பிடிக்குதோ இல்லையோ, ஆனால் நான் கூப்பிட்டவுடன் வரும் என் சப்தஸ்வரங்களுக்கு, என் சரஸ்வதிக்கு நான் துரோகம் செய்யமாட்டேன்” எனக் கூறினாராம். இதை இளையராஜாவே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இதைப் பகிர்ந்து வரும் இளையராஜாவின் ரசிகர்கள் அவரின் தொழில் நேர்மையை வியந்து பேசி வருகின்றனர்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…