Connect with us

16 வயதினிலே படத்துக்கு பிறகு அட்டர் ப்ளாப் ஆன பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’.. ரஜினி என்ன செய்தற் தெரியுமா..?

CINEMA

16 வயதினிலே படத்துக்கு பிறகு அட்டர் ப்ளாப் ஆன பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’.. ரஜினி என்ன செய்தற் தெரியுமா..?

 

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் இயக்குனர் ஆனதும் முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார்.  அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.

   

இந்நிலையில் 16 வயதினிலே படத்துக்கு பிறகு அவர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் கூட இயக்க வில்லை. ரஜினியே விரும்பி பாரதிராஜா இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அப்போதுதான் பாரதிராஜா இயக்கம் மற்றும் தயாரிப்பில் கொடி பறக்குது திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அப்போது ரஜினிகாந்த் தன்னுடைய சம்பளமாக 30 லட்சம் ரூபாய் வாங்கி வந்துள்ளார். ஆனால் பாரதிராஜாவிடம் வெறும் முன்பணமாக 5 ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டு அந்த படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். இந்த படம் ரஜினியின் மாஸ் ஸ்டைலுக்காக பாரதிராஜா தன் பாணியை விட்டு இறங்கி வந்து இயக்கிய திரைப்படம். ஆனால் அது ரஜினி படமாகவும் இல்லாமல் பாரதிராஜா படமாகவும் இல்லாமல் இருந்ததால் இரண்டு தரப்பு ரசிகர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால் படம் நல்ல தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்டு இருந்தது.

படம் ரிலீஸான பின்னர்தான் பாரதிராஜா ரஜினிக்கான சம்பளமாக 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படம் அட்டர் ப்ளாப் ஆகிவிட்டபடியால் அந்த 30 லட்ச ரூபாயிலும் 10 லட்ச ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டு 20 லட்ச ரூபாயை மட்டும் சம்பளமாக பெற்றுக் கொண்டுள்ளார்.

Continue Reading
To Top