Connect with us

சிங்கப்பூர் சாஷாவை கிராமத்து பெண் செவுலியாக மாற்றிய பாரதிராஜா… முதல் மரியாதை ரஞ்சனி இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?

CINEMA

சிங்கப்பூர் சாஷாவை கிராமத்து பெண் செவுலியாக மாற்றிய பாரதிராஜா… முதல் மரியாதை ரஞ்சனி இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?

 

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். ஆனால் தான் இயக்கிய முதல் மரியாதை படத்துக்கு அந்த பாத்திரத்தை உணர்ந்து நடிக்க வேண்டிய ஒரு நடிகர் தேவை என்பதால் சிவாஜி கணேசனை தேடிச் சென்றார்.

   

அந்த படத்தில் சிவாஜியோடு ராதா, வடிவுக்கரசி, தீபன், ஜனகராஜ் ஆகியோரோடு புதுமுகமான ரஞ்சனி என்பவரும் நடித்திருந்தார். இதில் ரஞ்சனி அந்த காலத்து பெண் போல ஜாக்கெட் அணியாமல் சேலை மட்டும் கட்டி நடித்திருப்பார். பார்ப்பதற்கு அக்மார்க் தமிழ்நாட்டு கிராமத்து பெண் போல தோற்றமளித்த இவர், உண்மையில் சிங்கப்பூரில் பிறந்தவர். சாஷா என்ற இவரை முதல் மரியாதை படத்தில் அறிமுகப்படுத்திய பாரதிராஜா அவருக்கு ரஞ்சனி என்று பெயர் மாற்றினார்.

முதல் மரியாதை படம் ஹிட்டானதும் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தன. ஆனால் தமிழை விட மலையாளத்தில் அவருக்கு கதாநாயகியாக அதிக வாய்ப்புகள் வந்தன. மோகன் லாலோடு அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்டாகின.

மலையாளத்தில் இவர் நடித்த முதல் படமான சுவாதி திருநாள் தேசிய விருதைப் பெற்றது. இதனால் ரஞ்சனியை கேரளத்தில் தூக்கிக் கொண்டாடினார்கள். இவ்வாறு தமிழ் சினிமாவிலும், மலையாள சினிமாவிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னணிக் கதாநாயகியாக வலம் வந்தார். அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகி சிங்கப்பூருக்கே சென்று தொழிலதிபராக இருந்து வருகிறார்.

தமிழில் ரஞ்சனி நடித்ததில் குறிப்பிடத்தகுந்த படங்களாக கடலோரக் கவிதைகள், மண்ணுக்குள் வரைம், குடும்பம் ஒரு கோவில், சகலகலா சம்பந்தி, தாய்மேல் ஆணை, பரிசம் போட்டாச்சு போன்ற படங்களை சொல்லலாம்.

Continue Reading
To Top