தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அப்படிதான் அவர் தன்னுடைய கிழக்கே போகும் ரயில் படத்துக்கே பொருத்தமாக இருப்பார் என்று சுதாகரைத் தேர்வு செய்துள்ளார். அதற்கு முன்னர் அந்த படத்தில் நடிக்க சிரஞ்சீவி கூட ஆடிஷனுக்கு வந்தாராம். ஆனால் அவரை கூட நிராகரித்துள்ளார்.
70 களில் இறுதியில் ஆரம்பித்த பாரதிராஜாவின் திரை வாழ்க்கை 2000 களின் தொடக்கம் வரை சிறப்பாக சென்றது. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரியளவில் ஹிட்டாகததால் அவர் இயக்கத்தைக் கைவிட்டு நடிகராக அதிக படங்களில் நடிக்க தொடங்கினார்.

#image_title
இளையராஜாவின் பக்கத்து ஊர்க்காரரான பாரதிராஜா, இளம் வயது முதலே இளையராஜா சகோதரர்களின் நண்பர்களாக இருந்து அவர்களோடு சேர்ந்து நாடகம் போட்டு , அதில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பாரதிராஜா வேறு பல வேலைகளையும் செய்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் மலேரியா நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் மலேரியா இன்ஸ்பெக்டராக அவர் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர் ராணுவத்தில் ஒரே ஒரு வாரம் மட்டும் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் சென்னைக்கு வந்து பெட்ரோல் பங்கில் பகுதி நேர ஊழியராக வேலைப் பார்த்துள்ளார். அதன்பிறகுதான் கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் உதவி இயக்குனராக வேலைக்கு சேர்ந்து திரைப்பட இயக்குனர் ஆகியுள்ளார்.
