Connect with us

நான் எவ்வளவோ சாதிச்சேன்… ஆனா இது மட்டும் என்னால பண்ண முடியல – பாரதிராஜா வருத்தப்படும் அந்த விஷயம் என்ன தெரியுமா?

CINEMA

நான் எவ்வளவோ சாதிச்சேன்… ஆனா இது மட்டும் என்னால பண்ண முடியல – பாரதிராஜா வருத்தப்படும் அந்த விஷயம் என்ன தெரியுமா?

 

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுவே அவரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. முதல் பட ஹிட் கொடுத்த போது ஏதோ அதிர்ஷ்டத்தில் வென்றதாக பலரும் சொன்னார்கள். ஆனால் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிப் படங்களாகக் கொடுத்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

   

பாரதிராஜா படங்களின் தனிச்சிறப்புகளில் ஒன்று அவர் படத்தின் பாடல்கள் அப்படியே தமிழ் மண்ணின் சாரத்தை உறிஞ்சு எடுத்து வந்தது போல இருக்கும். அவர் இதுவரை இளையராஜா, தேவேந்திரன், ஏ ஆர் ரஹ்மான், தேவா என பல லெஜண்ட் இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுளார். அவர் படத்தின் எல்லா பாடல்களுமே எப்படியாவது ஹிட்டாகிவிடும். அந்த அளவுக்கு அவருக்குப் பாடல்கள் பற்றிய அறிவும் ஆர்வமும் இருந்துள்ளது.

இப்படி பல சாதனைகளை நிகழ்த்திய பாரதிராஜா, தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஒரு ஆசை மட்டும் கடைசி வரை நிறைவேறவேயில்லை. அது என்னவென்றால் தன் படத்தில் ஒரு பாடலில் கூட காந்தக் குரலோன் டி எம் சௌந்தர்ராஜனை பாடவைக்க முடியவில்லை என்பதுதான் அது.

பாரதிராஜா அறிமுகமான காலத்தில் டி எம் எஸ் –ன் மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. அப்போது SPB, யேசுதாஸ் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோர் வளர ஆரம்பித்து அவர்கள் சூப்பர் ஸ்டார் பாடகர்களாகி விட்டனர். இளையராஜாவும் டி எம் எஸ் க்கு அதிக பாடல்களைக் கொடுக்கவில்லை.

இந்நிலையில் டி எம் எஸ் குறித்து பேசும்போது பாரதிராஜா “எப்பேர்ப்பட்ட கணீர் குரலில் பாடுவார் அவர். அந்த குரலை மனிதக்குரல் என்று நான் சொல்ல மாட்டேன். அது தமிழின் குரல். அப்படிப்பட்ட குரலை என்னுடைய படங்களிலே ஒரு இடத்தில் கூட பயன்படுத்தாமல் விட்டுவிட்டேனே என்ற ஆதங்கம் இன்று வரை என் மனதில் உள்ளது.” என ஒருமுறை ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Continue Reading
To Top