நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி மக்களின் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டம்தான் பாரத் அரிசி திட்டம். சந்தையில் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு ரகங்களின் விலை சீராக நீடிப்பதால் மலைவு விலை விற்பனைக்கான பாரத் அரிசி திட்டம் கைவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறு சீரற்ற பருவநிலை மற்றும் சாகுபடி பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் 2023 இறுதியில் அரிசி, பருப்பு ரகங்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்களின் சில்லறை விலை கடுமையாக உயர்ந்தது.
விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக பாரத் அரிசி திட்டத்தை மத்திய அரசு மலிவு விலையில் செயல்படுத்தி வந்தது. பிறகு 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த திட்டம் கைவிடப்பட்ட நிலையில் ஆண்டு இறுதியில் பண்டிகை சீசனை முன்னிட்டு மீண்டும் குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்பட்டது. இதில் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, அரிசி மற்றும் கோதுமை ஆகியவை குறைந்த விலையில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. 2024 ஏப்ரலில் எட்டு புள்ளி 70% இருந்த உணவு பணவீக்கம் 2025 ஏப்ரலில் 1.78 சதவீதமாக சரிந்தது. அதே நேரம் உணவு தானியங்களின் விலை உயர்ந்தால் மீண்டும் பாரத் திட்டம் பெயரில் விற்பனையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதுவரை இந்த திட்டம் கைவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71) மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாகச்…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் 72 மணி நேரத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…
மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…
வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…