பொதுவாகவே வெள்ளித்திரை நடிகர்களுக்கும் சின்னத்திரை நடிகர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அதுதான் காதல் திருமணம். 80 மற்றும் 90 கால கட்டங்களில் இருந்து தற்போது வரை சினிமாக்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் பிரபலங்கள் பலரும் தங்களுக்குள்ளேயே காதலித்து திருமணம் செய்து கொள்வது இன்றளவும் தொடர் கதையாக தான் இருக்கிறது. அப்படி காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பிரபலங்கள் ஒரு சிலர் மட்டுமே கடைசிவரை ஒன்றாக வாழ்கின்றனர். பெரும்பாலான ஜோடிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகிறார்கள். அதன்படி சின்ன திரையில் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு விவாகரத்து பெற்ற ஜோடிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜெயஸ்ரீ – ஈஸ்வர்:
சின்னத்திரை பிரபலங்களான இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமண வாழ்க்கை சுமுகமாக சென்று கொண்டிருந்த நிலையில் ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.
விஷ்ணு – ஹரிப்ரியா:
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி கொண்டிருப்பவர் தான் ஹரிப்பிரியா. அதனைப் போலவே வாணி ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்தான் விஷ்ணு. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
திவ்யா – அர்ணவ்:
சீரியல் நடிகர்களான இவர்கள் இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஆண்டு பல பிரச்சனைகளை சந்தித்து மீடியா வரை சென்று விவாகரத்து வரை சென்றது. தற்போது திவ்யாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இருவருமே தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
ரச்சிதா – தினேஷ்:
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரச்சிதா சீரியல் நடிகரான தினேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட தற்போது இவர்களின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
சம்யுக்தா – விக்னேஷ் காந்த்:
ஒரே சீரியலில் ஜோடியாக நடித்த இந்த சீரியல் பிரபலங்கள் நிஜத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரே மாதத்தில் முடிவுக்கு வந்தது தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரேஷ்மா:
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலஷ்மி சீரியலில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் காமெடி நடிகராக சூரியின் மனைவியாக நடித்து பிரபலமானார். ரேஷ்மாவின் முதல் திருமணம் பெற்றோர்கள் பார்த்து அவர்கள் சம்மதத்துடன் நன்றாக கோலாகலமாக நடைபெற்ற திருமணம் ஆகும். ஆனால், சில வருடங்களிலேயே இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து சில காரணமாக இவர்கள் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பின்னர் சில காலங்களில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின்னர் இவர் தன் கணவருடன் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார். பின் இரண்டாவது திருமணத்திலும் இவருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் அவருடனும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
ஸ்ரித்திகா:
“மெட்டி ஒலி” சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரித்திகா. திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன “நாதஸ்வரம்” சீரியல் மூலம் தான் நடிகை ஸ்ரித்திகா மக்கள் மத்தியில் பிரபலமானார். கடந்த 2019 ஆண்டு நாதஸ்வரம் புகழ் நடிகை ஸ்ரிதிகாவுக்கு, சநீஸ் என்பவருடன் வெற்றிகரமாக திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் அதன் பிறகு இவர் சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.
மகாலட்சுமி:
மகாலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு சச்சின் என்ற 6வயது மகன் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பட்ட காரணங்களால் அனில் – மகாலட்சுமி விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர். சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரை பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
யமுனா விரைவுச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வெறும் 1 கி.மீ. வேகமாகச் சென்றதற்காக ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, வாகனத்தின்…
முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71) மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாகச்…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் 72 மணி நேரத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…
மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…