Categories: சினிமா

பூர்ணிமாவிடம் ஐ லவ் யூ சொல்ல ரொம்பவும் சிரமப்பட்ட பாக்யராஜ்.. இதுவரை பலரும் அறியாத சுவாரசிய காதல் கதை..!

Spread the love

இயக்குனர் பாக்கியராஜ் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். முன்னணி இயக்குனரான பாரதிராஜாவிடம் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் பாக்யராஜ் அசிஸ்டெண்டாக வேலை பார்த்துள்ளார். கடந்த 1979-ஆம் ஆண்டு ரிலீசான புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் பாக்யராஜ் ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சுவர் இல்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், விடியும் வரை காத்திரு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் உள்ளிட்ட படங்களில் பாக்யராஜ் நடித்தார். அந்த காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பூர்ணிமா ஜெயராமை பாக்யராஜ் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் இருக்கின்றனர். பாக்யராஜ் தனது மகன் சாந்தனுவை சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களில் சாந்தனு நடித்துள்ளார். சின்னத்திரை தொகுப்பாளரான கீர்த்தியை சாந்தனு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாக்யராஜுக்கு சரண்யா என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் தனது காதல் கதை குறித்து பாக்கியராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், சினிமாவுல ஐ லவ் யூ சொல்றது ரொம்ப ஈசி. ஆனா ரியல் லைப்ல அது ரொம்பவே கஷ்டம். பூர்ணிமா மீது எனக்கு காதல் வந்துருச்சு.

ஆனா அப்போ அவங்க சினிமாவில் பிஸியா நடிச்சிட்டு இருந்தாங்க. எப்படி சொல்றதுன்னு தெரியல. சரி வேணாம்னு விட்டுட்டேன். அதுக்கப்புறம் காரில் பூர்ணிமா கிளம்பும்போது பாரிஸ் போனா போன் பண்ணுங்க என்று சொன்னேன். எதற்கு அங்க போய் போன் பண்ண சொல்றாங்க என்று பூர்ணிமா ஷாக் ஆயிட்டாங்க. அதுக்கப்புறம் ஒரு வாரம் ஆகியும் பாரிஸில் இருந்து எந்த போன் காலும் லெட்டரும் வரல. சரி அவங்க நிறைய பிரபலங்கள் கூட நடிச்சிட்டு இருக்காங்க ரொம்ப பிசியா இருக்காங்க என்று நானும் விட்டுட்டேன். பிறகு என்னுடைய அசிஸ்டன்ட் இளமுருகன் ஒருநாள் என்கிட்ட வந்து சார் உங்களுக்கு பேரிஸில் இருந்து ஒரு தீவிர ரசிகை போன் பண்ணாங்க நான் இங்க பிசியா இருக்கீங்க இனிமே போன் பண்ணாதீங்கன்னு சொல்லி வச்சுட்டேன் என்று சொன்னாரு.

அதைக் கேட்டதும் என்ன சொன்ன பாரிஸில் இருந்து போன் வந்ததா என்று கேட்டுட்டு என்ன பண்றதுன்னு தெரியாம பிஆர்ஓ செல்வம் மூலமாக எங்க இருக்காங்க என்று விசாரித்து போன் நம்பர் வாங்கி போன் பண்ணேன். அப்போ வேற ஒருத்தர் போன் எடுத்ததும் நான் பாக்கியராஜ் பேசுறேன் என்று சொன்னவுடன் அவர் அங்கு இருக்கவங்க எல்லாரும் முன்னாடியும் கத்தி பூர்ணிமா மேடம் உங்களுக்கு பாக்கியராஜ் சார் போன் பண்ணி இருக்காங்க என்று கத்தி சொன்னாரு. அதன் பிறகு எனக்கு எதுக்கு அவர் போன் பண்ணி இருக்காரு என்று யோசித்தபடி பூர்ணிமா என்னிடம் வந்து போன் பேசினாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா திக்கி திணறி தான் அவங்க பாரிஸில் இருக்கும்போது போன் கால் மூலமாக ஐ லவ் யூ சொன்னேன் என்று தான் முதன்முதலாக ஐ லவ் யூ சொன்ன சுவாரஸ்ய சம்பவம் குறித்து பாக்கியராஜ் பகிர்ந்துள்ளார்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago