மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்திய அளவில் இரும்பு மனுஷி என்று பல அரசியல் தலைவர்களால் போற்றப்பட்டவர். அரசியல் என்பதையும் தாண்டி அவருடைய இளமை காலங்களை திரும்பிப் பார்த்தால் ஜெயலலிதா ஒரு சிறந்த நடிகை என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய 15 வது வயதிலேயே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து விட்டார். ஜெயலலிதா அரசியலுக்குள் வந்தது எப்படி என்றால் தனக்கு விருப்பமில்லாமல் நடந்த ஒன்று என்றுதான் சொல்வார். அதனைப் போலத்தான் அவர் சினிமாவுக்குள் வந்ததும். நன்றாக படிக்கக்கூடிய மாணவி படிப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய தாய் நடிகை சந்தியாவின் வற்புறுத்தலால் சினிமாவுக்குள் வந்தவர் தான் ஜெயலலிதா.
மிகவும் சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்ததால் பெரும்பாலும் அவருடன் ஜோடி சேர்ந்த அத்தனை நடிகர்களும் அவரை விட வயதில் மூத்தவர்களாக தான் இருந்தனர். 1965 ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை என்ற திரைப்படம் மூலமாகத்தான் ஜெயலலிதா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னனி நடிகையாக வலம் வந்தார். தாயார் சந்தியா தான் நடிக்கும் படங்களின் படபிடிப்பிற்கு சில நேரங்களில் தன் மகள் ஜெயலலிதாவை அழைத்துச் செல்வாராம்.
ஒருமுறை ஜெயலலிதாவை எம்ஜிஆர் நடித்த படப்பிடிப்பிற்கு அழைத்துச் சென்றாராம். அப்போது சுட்டியாக விளையாண்டு கொண்டிருந்த அம்முவை பார்த்து எம்ஜிஆர் உன்னுடைய பெயர் என்னம்மா என்று கேட்டாராம். அதற்கு ஜெயலலிதா ஆங்கிலத்தில் பதிலளித்துள்ளார். ஏன் உனக்கு தமிழ் தெரியாதா என்று எம்ஜிஆர் கேட்க அப்போதும் ஜெயலலிதா ஆங்கிலத்தில் தான் பதில் அளித்தார். உடனே எம்ஜிஆர் சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார். சரளமாக ஆங்கிலத்தில் பேசக் கூடியவர் ஜெயலலிதா.
இந்திய ஜனாதிபதியாக இருந்த விவி கிரீன் மகன் சங்கர் கிரீன் ஒரு ஆவணப்படத்திற்கு நன்றாக ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருந்த நேரம் ஒய்ஜி பார்த்த சாரதி ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன் பிறகு சந்தியாவிடம் பேசி ஜெயலலிதா தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அடம் பிடித்த நிலையில் முதலில் யோசித்த சந்தியா அதன் பிறகு சம்மதம் தெரிவிக்க ஜெயலலிதா அந்த ஆவணப்படத்தில் நடித்தார். அந்த ஆவணப்படம் தான் epistle. தமிழில் அதற்கு நீண்ட கடிதம் என்று பொருள்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…