தமிழ் திரைப்பட உலகின் பிரபல இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவையொட்டி, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அவரது உடல் மீது, “அன்புடன் உங்கள் பாக்யராஜ்” என்று அவரே கையெழுத்திட்ட ஒரு ரைட்டிங் பேடு மற்றும் பேனா வைக்கப்பட்டுள்ளது பார்ப்போரை நெகிழச் செய்யும் விதமாக அமைந்துள்ளது.
ஒரு சாதாரண பேப்பர் மற்றும் பேடுடன் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் பல சாதனைகளைப் புரிந்து ஒரு மாபெரும் வரலாற்றைப் படைத்த அவரது வாழ்க்கை தற்போது நிறைவடைந்துள்ளது. அவரது வாழ்நாளின் முக்கிய அடையாளங்களாக விளங்கிய பேனா, பேப்பர் மற்றும் பேடு ஆகியவையே அவரது இறுதி அஞ்சலியிலும் அவருடன் தோளோடு தோள் நிற்கிறது.
