கே பாக்யராஜ் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளகோவில் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். ஸ்ரீ ராமகிருஷ்ணன் மற்றும் பாரதிராஜா ஆகியோரிடம் உதவியாளராக சேர்ந்து தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் பாக்கியராஜ்.

திரைக்கதை எழுதுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர் பாக்யராஜ். அதற்காகவே இவர் பிரபலமானவர். 16 வயதினிலே திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் நடிகராக அறிமுகமானார் கே பாக்யராஜ். சிகப்பு ரோஜாக்கள் மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகிய இரண்டு படங்களில் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் கே பாக்யராஜ். 1979 ஆம் ஆண்டு சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பாக்கியராஜ் பிறகு பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். முந்தானை முடிச்சு திரைப்படத்தை எழுதி இயக்கி நடித்திருந்தார் கே பாக்யராஜ்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பாக்யராஜ் அவர்களை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதற்குப் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் இயக்கியும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தும் பிரபலமானார். இந்நிலையில் பாக்யராஜ் குறித்த சுவாரஸ்யமான செய்தி பரவி வருகிறது. அதாவது பேட்டி ஒன்றில் பேசிய பூர்ணிமா, “திருமணத்திற்கு பின் பாக்கியராஜ் சினிமா வேலைகளில் பிசியாகிவிட்டார். அதனால் ஹனிமூன் செல்ல நேரமில்லை. 2 குழந்தைகள் பிறந்து வளர்ந்த பிறகே அவருக்கு ஹனிமூன் செல்லும் எண்ணம் தோன்றியது. இதனால் 7 ஆண்டுகளுக்கு பிறகு 2 குழந்தைகள், மற்றும் அவரது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்றோம் என்று கூறியுள்ளார்.
