பாக்கியராஜ் சிஷ்யன் காஜா ஷெரிப் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?.. லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் !

By Nanthini on பங்குனி 19, 2025

Spread the love

தமிழ் சினிமா உலகில் எண்பது காலகட்டத்தில் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளனர். பிறகு காலப்போக்கில் வந்த நடிகர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அந்த வரிசையில் முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் காஜா ஷெரிப் . இவரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இவர் 1980 களில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தார். 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் என்ற திரைப்படம் மூலம் தான் சினிமா உலகிற்கு நடிகராக அறிமுகமானார்.

சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போன காஜா ஷெரீப் இப்போது எப்படி உள்ளார்

   

இதனை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு வரை பல திரைப்படங்களில் நடித்திருந்த காஜா ஷெரிப் அந்த காலகட்டத்தில் பிஸியான நடிகராக இருந்தார். அதிலும் தமிழ் சினிமா உலகின் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் நடிப்பில் அந்த ஏழு நாட்கள் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் பாக்கியராஜ் சிஷ்யனாக இவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் மூலம் தான் இவருக்கு தமிழ் சினிமா உலகில் ஒரு தனி அங்கீகாரம் கிடைத்தது. இந்தத் திரைப்படத்திற்கு பிறகு விசு நடிப்பில் வெளியான சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

300 படத்தில் நடிச்சு இருக்கேன்.. குடிப்பழக்கத்தில் வாழ்க்கை போச்சா? மனம் திறந்த காஜா ஷெரீப்! | antha 7 naatkal movie actor Kaja Sheriff Emotional Interview - Tamil Filmibeat

 

அதன் பிறகு மிகப் பிரபலமான நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் நிலைக்க முடியவில்லை. பிறகு சில காலம் இவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இந்த நிலையில் காஜா செரிப் குறித்த லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் மெலிந்த உடலுடன் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சாலையோரமாக இருக்கும் ஒரு டீக்கடையில் அவர் டீ குடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய இந்த பரிதாப நிலை ரசிகர்கள் பலரையும் கலங்க வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

sengottai Selvam பதிவைப் பகிர்ந்துள்ளார் (@sengottai_selvam)