#image_title
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பாற்றலைக் கொண்டவர் சாவித்ரி. அதனால்தான் அவரை திரையுலகினரும் ரசிகர்களும் நடிகையர் திலகம் என்று அழைத்தனர். ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட அவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார்.
சாவித்ரிக்கும் மற்ற நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசமே சாவித்ரி ஒரு பல்துறை வித்தகர் என்பதுதான். தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் செலவு செய்து பிரதாப்தம் என்ற பெயரில் படம் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இப்படம் படுதோல்வி அடைந்ததால் உடன் இறந்தவர்கள் சதி செய்து ஏமாற்றி சென்றனர் . இதனை அடுத்து விட்ட பணத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காக தனது வீடு சொத்துக்களை விற்று மேலும் மேலும் படங்களை தயாரித்தவர் இறுதி காலகட்டத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்து கடனில் சிக்கினார்.
தொடர் தோல்விகளால் காதல் கணவர் ஜெமினி கணேசனோடும் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார் . தொடர் நஷ்டம், சினிமா வாய்ப்புகள் இல்லாமை என விரக்தியில் குடிப்பழக்கத்துக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் அவர் குடிக்கு அடிமையாகவே ஆகிவிட்டார். இதனால் அவருக்கு நீரிழிவு உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டு ஆளே உருமாறியுள்ளார்.
நல்ல ஆரோக்யமான தேகத்துக்கு படங்களில் நடித்து வந்த அவர் இறுதிகாலத்தில் மிகவும் ஒல்லியாகி ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இது சம்மந்தமாக பாக்யராஜ் ஒரு நேர்காணலில் கூறிய தகவல் குறிப்பிடத்தக்கது. பாக்யராஜ் முதல் முதலாக ஏழை பணக்காரன் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
அந்த படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் சாவித்ரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த பாக்யராஜை இயக்குனர் சாவித்ரியை போய் அழைத்து வா எனக் கூறியுள்ளார். சாவித்ரியைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆசையில் அவர் அறைக்கு சென்றுள்ளார் பாக்யராஜ். அவர் அறைக்கு சென்று பார்த்தால் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு ஒல்லியாகிக் காணப்பட்டுள்ளார்.
அவரைப் பார்த்த அதிர்ச்சியில் பேச்சுவராமல், கண்கள் கலங்க நின்றுள்ளார் பாக்யராஜ். அவரிடம் ‘என்ன’ என்று கேட்டுள்ளார் சாவித்ரி. ஒன்றுமே பேசமுடியாமல் சில வினாடிகள் பிரமை பிடித்தது போல நின்ற பாக்யராஜ் அப்புறம்தான் ‘ஷாட் ரெடி. டைரக்டர் கூப்பிடுறார்’ எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…