தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அதன் பிறகு பெரும்பாலும் அவர் ஹீரோவாக நடிக்கவே முன்னுரிமை கொடுத்தார். 80 களில் முன்னணி நடிகராக இருந்த அவர் 90 களில் தனது மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு சொக்கத்தங்கம் மற்றும் பாரிஜாதம் என இயக்குனராக மட்டும் கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படங்கள் பெரியளவில் ஓடாததால் அவரால் இயக்குனராக அதன் பின்னர் தொடர முடியவில்லை. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக இப்போது கலக்கி வருகிறார்.
பாக்யராஜ் சினிமாவுக்கு வந்தபோது அவர் சென்று சேர்ந்த இடம் பாரதிராஜா என்பதால் விரைவிலேயே சினிமாவைக் கற்றுக் கொண்டு இயக்குனர் நடிகர் ஆகி வெற்றிகரமாக வலம் வந்தார். இந்நிலையில் பாரதிராஜாவுக்கும் தனக்கும் இடையே நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி பாக்யராஜ் பேசியுள்ளார். அதில் “நான் சினிமாவுக்கு வரும்போது டெக்னிக்கலாக எந்த விஷயமும் தெரியாது. பில்ம் நெகட்டிவ்வை வெளிச்சத்தில் காட்டினால் எடுத்தக் காட்சிகள் எல்லாம் அழிந்துவிடும் என்று கூட தெரியாது.
16 வயதினிலே படத்தில் கமல் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரை வைத்து எடுத்தக் காட்சிகளை எல்லாம் எடுத்துப் பார்க்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த பாரதிராஜா சார் கிட்ட அதைக் கேட்டேன். அவர் என்னை அதிர்ச்சியாகப் பார்த்து “ஏன்டா நெகட்டிவ்வ எடுத்துப் பார்த்தா என்ன ஆகும்னு கூட தெரியாம எப்படிடா சினிமாவுக்கு வந்த?.. என் வாழ்க்கையையவே கொஞ்ச நேரத்துல காலி பண்ணிருப்ப’ என திட்டினார்” எனப் பகிர்ந்துள்ளார்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…