தொங்கும் தொப்பைக்கு முடிவு கட்டணுமா?…. இதோ 30 நாட்கள் இதை மட்டும் குடிங்க போதும்… நீங்களும் ஸ்லிம்மா மாறிடலாம்..!

By Nanthini on கார்த்திகை 26, 2025

Spread the love

பொதுவாகவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். ஆனால் ஒரு சில இடத்தில் அமர்ந்தபடி மணிக்கணக்கில் வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லாதது, சரியான தூக்கமின்மை, அதிக மன அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் உடல் எடை அதிகரிப்பதுடன் தொப்பை போடுவதும் சாதாரணமாகிவிட்டது. தொப்பையை உடனடியாக குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சந்தைகளில் கிடைக்கும் பல்வேறு ரசாயன உற்பத்திகளையும் பயன்படுத்தி நேரத்தையும் பணத்தையும் வீணடித்து பக்க விளைவுகளை பலருமாக பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் தொங்கும் தொப்பையை குறைத்து கட்டுக்கோப்பான உடலை பெற திணை அரிசி மசாலா கஞ்சியை தயாரித்து குடிக்கலாம். இதனை 30 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் தொப்பை குறைய ஆரம்பிப்பதை நீங்களே உணர முடியும்.

தேவையான பொருட்கள்

   

எண்ணெய் – 2 தே.கரண்டி

   

சீரகம் – 1 தே.கரண்டி

 

சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது)

கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

புதினா – 10 இலைகள்

மிளகுத் தூள் – 1/2 தே.கரண்டி

திணை அரிசி – 1 கப்

தண்ணீர் – 5 கப்

உப்பு – சுவைக்கேற்ப

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

முதலில் திணை அரிசியை நீரில் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து பிறகு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய கேரட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து புதினா இலைகளை சேர்த்து அரை டீஸ்பூன் மிளகுத்தூளையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு ஊற வைத்த திணை அரிசியை நீரில் கழுவி விட்டு அதில் சேர்த்து ஒருமுறை வதக்க வேண்டும். பின்னர் ஐந்து கப் நீரை ஊற்றி சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்க வேண்டும். ஆரியதும் குக்கரை திறந்து அதில் கொத்தமல்லியை தூவி கிளறி பரிமாறினால் சுவையான தினை அரிசி மசாலா கஞ்சி தயாராகிவிடும். இதனை 30 நாட்கள் குடித்து வந்தாலே தொப்பை நன்றாக குறையும்.