தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன. இதனிடையே அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலைமை மாறி விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் மறுபக்கம் விஜயை அதிமுக கூட்டணியில் இணைத்து விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கூட தேர்தல் பிரச்சாரத்தில் இதுகுறித்து சூசகமாக தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் அதிமுக எனும் மாபெரும் இயக்கம் 55 வது ஆண்டில் அடி எடுத்து வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்யிடமிருந்து எப்போது அழைப்பு வரும் என்று இபிஎஸ் காத்துக்கொண்டு இருப்பதாக விமர்சித்தார். மேலும் தற்போது அவரை நடவடிக்கையை பார்த்தால் பாஜகவை கழற்றிவிட்டு விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர நினைக்கிறாள் போல தெரிகிறது என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
