BE படிப்பை பாதியில் நிறுத்திய வாலிபர், வேலையும் கிடைக்கல… திடீரென மாடியில் இருந்து குதித்து உயிரை விட்ட அவலம்… அதிர்ச்சி சம்பவம்….!

By Nanthini on ஐப்பசி 21, 2025

Spread the love

நவீன நகர வாழ்வில் மனநலத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் சூழலிலும் இளைஞர்களின் உணர்ச்சி தளர்ச்சியை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என இந்த சம்பவம் உணர்த்துகிறது. கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் நடந்த துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த சாஹர்(34) என்ற இளைஞர் திடீரென்று தற்கொலை முடிவு எடுத்து மூன்றாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். இன்ஜினியரிங் படிப்பைப் பாதையில் நிறுத்திய அவர் நீண்ட காலமாக வேலை கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சம்பவம் நடந்த காலை அவர் வழக்கம் போல அந்த மாலுக்கு சென்றுள்ளார். பிறகு மூன்றாவது மாடியில் இருந்து திடீரென்று குதித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பழகுப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.