அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள், படிப்பவர்கள் அலாரம் வைத்து எழுந்திருப்பது வழக்கம். ஆனால் இந்த வழக்கமான செயல் மூளைக்கும் இதயத்திற்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இதை நரம்பியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இப்படி அலாரம் சத்தத்திற்கு மன அழுத்த ஹார்மோன்கள். ரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். மனித உடல்கள் ஒரு உள் கடிகாரத்தால் இணைக்கப்பட்டுள்ளது. இது “சர்கார்டியன் ரிதம்” என்று அழைக்கப்படுகிறது. தூக்கம் மற்றும் வெளி சுழற்சிகளை இது வழி நடத்தி வருகிறது. தூக்கம் முடிந்ததும் மூளை இயற்கையாகவே உடலை விழித்தெழும்படி சிக்னல் கொடுக்கும். இந்த மென்மையான எழுச்சி தான் இதயத்தை சீராகவும் மனதை விழிப்போடும் வைத்திருக்கிறது.
ஆனால் கடிகாரத்தில் சத்தம் வைத்து எழும்பொழுது இந்த செயல்பாடு சீர்குலைகிறது. காலையில் கார்டிஸோலின் அளவு படிப்படியாக அதிகரித்து உடல் புத்துணர்ச்சியோடு இருக்க உதவுகிறது. ஆனால் அலாரம் உடலை வெளிப்படுத்த செய்யும்பொழுது திடீரென்று கார்டிசோல் உயர்ந்து மன அழுத்தத்தை உண்டாக்கும். இதனால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது . அலாரம் ஒலிப்பதால் இதயத்தை அழுத்துவது மட்டுமல்லாமல் மூளையையும் குழப்புகிறது. ஆழ்ந்த தூக்க நிலையில் இருந்து எழுந்திருப்பதை மனதை தூக்க செயலற்றத் தன்மை என்று அழைக்கப்படும் ஒரு மூடுபனி நிலைக்கு அழைத்துச் செல்லும். பல மணி நேர ஓய்வு இருந்தாலும் காலை நேரத்தில் சில நேரங்களில் சோர்வாகவும் மந்தமாகவும் உணர இதுவே காரணம்.
