ஐடி ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…!! புதிய தொழிலாளர் சட்டத்தால் என்னென்ன பலன்கள் தெரியுமா…?

By Devi Ramu on கார்த்திகை 23, 2025

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தொழிலாளர்களின் நலனுக்காக, ஏற்கனவே இருந்த 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, நான்கு புதிய சட்டத் தொகுப்புகளை  நவம்பர் 21ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டங்கள் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை ஊழியர்கள் உட்படப் பலருக்கும் முக்கியமான பலன்களை உறுதி செய்கின்றன. தொழிலாளர் ஊதியச் சட்டம், தொழில்துறை உறவுகள் சட்டம், சமூகப் பாதுகாப்புச் சட்டம், மற்றும் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் ஆகியவை அமலுக்கு வந்துள்ளன.

முக்கிய பலன்கள்:

   

அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிரந்தர ஊழியர்களுக்கு இணையான அனைத்துச் சலுகைகளையும், சமமான பணி நேரத்தையும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சம ஊதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதல் நேரப் பணிக்கு (Overtime) ஊழியர்களுக்கு இரட்டைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் அவர்களின் விருப்பத்தைப் பெற்ற பின், இரவு நேரப் பணியில் ஈடுபடுத்தலாம்.

   

இது ஐ.டி. துறையில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கலாம். ஒரு நிறுவனத்தில் ஓராண்டு காலம் பணியாற்றினாலே கிராசூவிட்டி தொகை பெறுவது உள்ளிட்ட அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தச் சட்டங்கள் அனைத்துத் துறைகளிலும் தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை அரசு நிர்ணயிக்க வழிவகை செய்கின்றன. அத்துடன், ஊதிய வரம்பைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஊழியர்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் பங்களிப்பு பெறுவதை இவை உறுதி செய்கின்றன.