கல்வி முதல் திருமணம் வரை…! விவசாய பெண்களுக்கு அரசு தரும் வரப்பிரசாதம்…! உழவர் பாதுகாப்பு அட்டையின் பலன்கள் என்னென்ன தெரியுமா….?

By Devi Ramu on தை 24, 2026

Spread the love

விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் நலனுக்காகத் தமிழக அரசு ‘உழவர் பாதுகாப்புத் திட்டம்’ மூலம் பல்வேறு நிதியுதவிகளை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பெண்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக, பெண் உறுப்பினர்களுக்குத் திருமண உதவித்தொகையாக 10,000 ரூபாயும், மகப்பேறு கால நிதியுதவியும் வழங்கப்படுகிறது.

இது தவிர, விபத்து நிவாரணம், இயற்கை மரணத்திற்கான ஈமச்சடங்கு நிதி, முதியோர் ஓய்வூதியம் மற்றும் விவசாயிகளின் குழந்தைகளின் உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை போன்ற பல சலுகைகளை இந்த அட்டையைப் பயன்படுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 65 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.  மேலும், சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் 2.50 ஏக்கர் நன்செய் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது.

   

தகுதியுள்ள பெண்கள் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) உரிய விண்ணப்பத்தை அளிக்கலாம் அல்லது ‘இ-சேவை’ மையங்கள் வழியாகவும் ஆன்லைனில் விண்ணப்பித்து அடையாள அட்டையைப் பெறலாம். விண்ணப்பிக்கும்போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிப் புத்தக நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.