தனுஷ் முதல் இயக்குநர் லோகேஷ் வரை.. கருங்காலி மாலையை அணிய இதான் காரணமா..? வியக்க வைக்கும் தகவல்கள்.

By admin on புரட்டாதி 12, 2023

Spread the love

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் சிவகார்த்திகேயன், தனுஷ் என ஏராளமான நடிகர்கள் கருங்காலி மாலையை சமீபத்தில் அணிந்திருப்பதை பார்க்கலாம். அதன் மகத்துவம் அறிந்த பலரும் கருங்காலி மாலையை அணிய ஆர்வம் காட்டுகின்றனர். அதை யார் அணியலாம்? யார் அணியக் கூடாது என்பதை பார்ப்போம்.

   

பல ஆண்டுகளாக இருக்கும் கருங்காலி மரத்தின் நடுப்பகுதி கடுமையானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். அதன் தண்டு பகுதியை வெட்டி சுவாமி சிலைகள், வீட்டு உபயோக பொருட்கள் செய்கின்றனர். பழங்காலத்தில் இந்த மரத்தினால் உலக்கை செய்துள்ளனர். அந்த உலக்கை மிகவும் உறுதியானதாக இருந்தது. தற்போது இதன் விலை அதிகம் என்பதால் உலக்கை செய்யப்படுவதில்லை. கருங்காலி மரத்தின் வேர், பட்டை, பிசின் ஆகிய அனைத்தும் மருத்துவத் துறையில் உபயோகப்படுத்தப்படுகிறது.

   

 

துவர்ப்பு சுவை மிகுந்த இந்த மரம் வயிறு பிரச்சனைகள், நீரிழிவு நோய், ரத்த குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கருங்காலி கட்டையை தண்ணீரில் ஊற வைத்து குளித்தால் உடல் சோர்வு வலி நீங்கும். இதே போல அந்த கட்டையை ஊற வைத்து கஷாயமாக கொதிக்க வைத்து தினமும் இரண்டு வேளை குடித்தால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறி சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

மேலும் கருங்காலி மர பிசினை பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் உடல் வலுவாகும். மேலும் நீர்த்துப் போன விந்து கெட்டிப்பட்டு, பித்தத்தை குறைக்கும். பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட கருங்காலி மரம் மின்காந்த கதிர்களை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டது. இந்த மரம் முருகப்பெருமானுக்கு உகந்த மரம். செவ்வாய் கிரகத்தின் நற்குணங்கள் ஆதிக்கம் பெற்றதாக இந்த மரம் பார்க்கப்படுகிறது.

எனவே இந்த கருங்காலி மரக்கட்டையால் செய்யப்பட்ட மாலையை மேஷம், விருச்சகம், மிதுனம் ராசியினரும், மிருகசீரிஷம், திருவாதிரை, அஸ்வினி, பரணி, விசாகம் அனுஷம் கேட்டை, திருவோணம், ஆகிய நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் அணிவது நன்மை தரும். அதிலும் குறிப்பாக திருவாதிரை நட்சத்திரம் உடையவர்கள் செங்கருங்காலி அணிவது கூடுதல் நன்மையை அளிக்கும். பொதுவாக கோவில் கோபுரங்களில் இருக்கும் கலசங்களை நிறுத்துவதற்கு கருங்காலி கட்டைகளை உபயோகப்படுத்துவார்கள்.