இன்றைய உலகம் பரபரப்பானதாக ஆகிவிட்டது. ஃபாஸ்ட் ஃபுட் மயம் ஆகிவிட்டது. எங்கு திரும்பினாலும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் தான் ஆக்கிரமித்து இருக்கிறது. பிரியாணி, பரோட்டா, ப்ரைட் ரைஸ், பீட்சா பர்கர், கேஎஃப்சி சிக்கன் என அனைத்தும் உடலுக்கு கேடு விளைவிப்பவை ஆகும். என்னதான் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மக்கள் தங்களது உடல் நலனில் அக்கறை கொண்டாலும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தில் இருந்து முழுமையாக தங்களை யாராலும் பிரித்துக் கொள்ள முடியாத நிலைமைதான் இன்று இருக்கிறது. ஆனால் இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிடும்போது உடலில் பல உபாதைகள் ஏற்படுகிறது. அதை நாம் சில வழிகளில் தடுக்கலாம் உடலை பாதுகாக்கலாம். அதில் ஒன்றுதான் சுடுதண்ணீர் குடிக்கும் பழக்கம். சுடுதண்ணீரை தினமும் குடித்து வந்தால் அது நம் உடலில் எண்ணற்ற பலன்களை அளிக்கும். அது என்னவென்று இனி காண்போம்.
நீங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைத்தால் குளிர்ந்த தண்ணிரை விட வெதுவெதுப்பான நீரை குடிப்பதற்கு பழகிக்கொள்ளுங்கள். வெதுவெதுப்பான நீரை குடிப்பது எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை தடுக்கிறது. வெதுவெதுப்பான சுடு தண்ணீரை குடிப்பது மூலம் நம் உடலில் செரிமானம் நல்ல முறையில் நடைபெறும். நம் உடம்பின் செரிமானத்தை தூண்டி செரிமானை பாதை வழியாக உணவை சிறப்பாக நகர்த்த எளிதாக்க சுடுதண்ணீர் உதவுகிறது.
சூடான நீரை குடித்தால் மலச்சிக்கலில் இருந்து தீர்வு கிடைக்கும். சுடு தண்ணீரை குடிக்கும்போது நம் உடலில் உடனே வியர்வை வெளியேறும். வியர்வை அதிகரிப்பதன் மூலம் நம் உடலில் இருக்கும் நச்சு வெளியாகும். நம் உடலில் இருக்கும் நச்சு வெளியேற்ற சுடுதண்ணீர் உதவும்.
சுடுதண்ணீரை குடிக்கும்போது வரும் நீராவியை நம் மூக்கின் மூலமாக உள் இழுத்தால் நாசியில் நெரிசலை போக்கவும் சளி சைனஸ்சிட்டிஸ் மற்றும் ஒவ்வாமை அறிகுறிகளை போக்கவும் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் சுடுதண்ணீரை குடிப்பது மூலம் நம் ரத்த நாளங்கள் தளர்வடைந்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வேகமாக சென்றடைய இது உதவுகிறது.
சுடு தண்ணீர் குடித்து வந்தால் தசை வீக்கம் மூட்டு விறைப்பு புண் தசைகள் மூட்டு வலி மற்றும் மாதவிடாய் பிடிப்புகள் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஆகவே பலவித உடல் சார்ந்த உபாதைகளுக்கு முதல் வைத்தியமாக சுடு தண்ணீர் இருக்கிறது. இதை கடைப்பிடித்தால் நம் உடம்பில் நிச்சயம் ஒரு மாற்றம் தெரியும்.