நாம் அனைவரும் பல விதமான உணவுகளை விரும்பி சாப்பிடுவோம். சைவம் அசைவம் என பன்னாட்டு உணவுகளையும் விரும்பி சாப்பிடுவோம். அதில் பாஸ்ட் புட்களும் அடங்கும். சில உணவுகளால் உடல் உபாதைகள் நமக்கு ஏற்படலாம். எப்போதும் நம் உடம்பு சரியாக இயங்குவதற்கு ஒரு சிலவற்றை நாம் கடைபிடிக்க வேண்டும். நம் முன்னோர்கள் வாரத்திற்கு ஒருமுறை கஷாயம் குடிப்பது போன்றவற்றை செய்து உடல் நச்சுக்களை வெளியேற்றி வந்தனர். அவர்கள் பயன்படுத்திய மூலிகைகளின் முக்கியமானது சீரகம். அதை பற்றி இனி காண்போம்.
உடல் சீராக இயங்க சீரகம் என்று கூறுவார்கள். இது ஒரு அற்புதமான சமையல் பொருள் நம் வீட்டில் எப்போதும் இருக்க கூடிய ஒரு பொருள். சீரகம் உணவின் சுவையை கூட்டுவதை தவிர பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை உட்கொள்வது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது.
சீரகத் தண்ணீர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும் உடம்புக்கு மிகவும் நல்லது மற்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு டம்ளர் சீரகத் தண்ணீர் குடிப்பதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அதிசயங்களையும் செய்யும். உள்ளுறுப்புகள் முதல் முடி தோல் வரை அனைத்திற்கும் நன்மை பயக்கக் கூடியது இந்த சீரக தண்ணீர்.
சீரகத்தை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் தண்ணீரை குடிக்கலாம் அல்லது சீரகத்தை கொதிக்க வைத்து அந்த தண்ணீரையும் குடிக்கலாம். இப்படி தொடர்ந்து குடித்து வரும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், அழச்சி எதிர்ப்பு விளைவை மேம்படுத்தும், செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மாதவிடாய்களை ஒழுங்கு படுத்துகிறது, பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிகவும் முக்கியமானது ஆகும்.
சீரகத் தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் ஆரோக்கியமான மற்றும் இளமையான சருமத்தை பெறலாம். நம் முடியை ஆரோக்கியமாக வளரச் செய்கிறது. இதயா ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்த சோகைக்கு சிகிச்சையாக இது அமைகிறது. உடல் எடையை குறைப்பதற்கு சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சீரகத்தில் பொட்டாசியம், இரும்புச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.