கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்கணுமா…? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2025

Spread the love

வெந்தயம் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் சமநிலைப்படுத்தும் மூலிகையாக பயன்படுகிறது. வெந்தய விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம் இரவு முழுவதும் வெந்தய விதைகளை தண்ணீரில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். அது குடல்களை சுத்தப்படுத்தி வாயு, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.

முகம் பளபளப்பாக இருக்கும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் நபர்கள் வெந்தய நீரை குடிக்கலாம். இதனால் தேவையற்ற பசி குறைகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு படிப்படியாக குறையும். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து கொழுப்பை உடைக்க உதவி செய்கிறது. கொழுப்பின் அளவை வெந்தயம் பராமரிக்கிறது என பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது.

   

இதய ஆரோக்கியத்திற்கு வெந்தய நீர் நன்மை பயக்கும். இது கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதய தமனிகளில் அடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. ஆயுர்வேதத்தின்படி வெந்தய நீர் இதயத்திற்கு ஊட்டமளிக்கும் மூலிகை சரியான ரத்த ஓட்டத்தையும் ஊக்குவிக்கும்.

   

பெண்களுக்கு தைராய்டு, மாதவிடாய் பிரச்சனைகளிலிருந்து வெந்தயம் நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவை சமம் செய்து தோல், முடி இரண்டிற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். வெந்தயத்தில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை பளபளப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும்.