மண மணக்கும் வாசனையுடனும் நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கக்கூடிய சீதா பழங்களை நாட்டுப்புறங்களில் அதிகமாக பார்க்க முடியும். கடைகளில் விற்பனை செய்யும் பழங்களை விட மரத்தில் பழம் ஆகிய சீதாப்பழங்கள் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். அந்த மரத்தின் பழம் மட்டுமல்லாமல் இலைகளையும் ஏராளமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். வைட்டமின் B, C, மக்னீசியம், நார்ச்சத்து, இரும்பு சத்து, ஊட்டச்சத்து மற்றும் கனிமச்சத்து ஆகிய சத்துக்கள் சீதாப்பழத்தில் நிறைந்துள்ளது. உதாரணத்திற்கு 100 கிராம் சீதாப்பழத்தில் 94 கலோரிகள் உள்ளது. இவ்வளவு பலன்களை வழங்கும் சீதாப்பழங்கள் சாப்பிடுவதால் என்னென்ன பழங்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அனிமியா பிரச்சனை உள்ளவர்கள் சீதாப்பழத்தை சாப்பிடலாம். இதில் மஞ்சள் கலந்து சாப்பிடும்போது கொலஸ்ட்ரால் உடலில் தங்காமல் வெளியேறும்.
மோசமான உணவு பழக்கங்கள் காரணமாக நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் ஏராளம். குறிப்பாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களுக்கு சீதாப்பழம் மருந்தாக இருக்கும். ஏனென்றால் இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக உள்ளது. அத்துடன் குடலில் உள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் இது வெளியேற்றும்.
சீதாப்பழங்கள் சாப்பிடும் ஒருவரின் முழங்கால்கள் உறுதியாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மக்னிசிய சத்து நிறைந்திருக்கும் சீதாப்பழத்தில் அமீவங்களின் சேர்க்கையால் இந்த வலு கிடைக்கின்றது.
அசிடிட்டி மற்றும் அல்சர் போன்ற பிரச்சனை உள்ளவர்களும் சீதாப்பழத்தை சாப்பிடலாம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இருக்கும் சமயத்தில் சீதாப்பழம் எடுத்துக் கொண்டால் அமிலத்தன்மையை குறைக்கும். வயிற்றில் இருக்கும் புண்களுக்கு விடிவு காலம் கிடைக்கும். சிறிதளவு வெந்தயத்துடன் சீதாப்பழம் சேர்த்து சாப்பிட்டால் குடல் புண்கள் தடம் தெரியாமல் மறைந்து விடும்.
