போடு ரகிட ரகிட… விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சலுகை… புதிய விதிமுறைகள் அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 17, 2025

Spread the love

25 ஆண்டுகள் பணி முடித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேசிய ஓய்வூதிய முறையின் படி ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்த சமீபத்தில் மத்திய சிவில் சர்வீஸ் விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த விதிகளை கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டது.

அதன்படி 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள் விகிதாச்சார அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெற தகுதி உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் 20 ஆண்டுகள் பணிக்கு பிறகு விருப்ப ஓய்வு பெற ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது. பணியாற்றிய ஆண்டுகளை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டு உறுதி அளிக்கப்பட்ட ஊதியம் சந்தாதாரருக்கு வழங்கப்படும். அவர் ஓய்வு பெறக்கூடிய நாளில் இருந்த இந்த தொகை வழங்கப்படும்.

   

தனிப்பட்ட தொகுப்பில் 60% இறுதியாக திரும்ப பெறுதல், ஒவ்வொரு ஆறு மாத பணிக்கும் அகவிலைப்படி, ஓய்வு பணிக்கொடை, விடுப்பை பணமாக்குதல் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் குழு காப்பீட்டு திட்டம் போன்ற இதர சலுகைகளையும் ஓய்வு பெறும் போது பெறலாம். ஒருவேளை விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு உறுதி அளிக்கப்பட்ட ஊதியம் பெறுவதற்கு முன்பே சந்தாதாரர் உயிரிழந்து விட்டால் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்ட அவருடைய கணவர் அல்லது மனைவிக்கு குடும்ப ஊதியம் வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.