இந்திய இரயில்களில் இருக்கைக்காக நடக்கும் மோதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஒரு ரயிலில் இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட “துரந்தர்” பாணி சண்டை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருக்கை தொடர்பான வாக்குவாதத்தில் தொடங்கிய இந்த மோதலில், வெள்ளை நிற டி-சர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் தனது இடுப்பு பெல்ட்டை கழற்றி மற்றவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட இளைஞரும் சளைக்காமல் திருப்பித் தாக்க, ரயிலே போர்க்களமாக மாறியது. சக பயணிகள் அச்சத்தில் உறைந்து போயிருக்க, பொது இடத்தில் நடந்த இந்த வன்முறை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
“Dhurandhar style fight in train.” 🔥
Two youths got into a fight over a seat. The man in the white T-shirt was hitting him with a belt, while the other retaliated as well.
It seems train journeys in India are not safe for civilized people. It’s a serious concern. pic.twitter.com/LusoVKFXNu
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) March 25, 2026
இந்திய இரயில் பயணங்கள் நாகரீகமான மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒன்றாக மாறி வருகிறதோ என்ற அச்சத்தை இச்சம்பவம் எழுப்பியுள்ளது. ஒரு சிறிய இருக்கைக்காக பெல்ட் மற்றும் கைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள், ரயிலில் பயணிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளன. சட்டம் மற்றும் ஒழுங்கை மதிக்காமல் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற நபர்கள் மீது இரயில்வே காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
