தமிழகத்தின் முக்கிய அரசு பெண் அதிகாரி திடீர் மரணம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!

By Nanthini on புரட்டாதி 25, 2025

Spread the love

தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் (56) IAS காலமானார். உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவருடைய உயிர் பிரிந்தது. தூத்துக்குடியை சேர்ந்த இவர் செங்கல்பட்டில் துணை ஆட்சியராக பணியை தொடங்கி அரசின் பல்வேறு துறைகளில் செயலாளராகவும் இருந்தவர். கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியவர்.

இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அடிப்படையில் டாக்டரான பீலா வெங்கடேசன், இந்திய இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வாகிய பல்வேறு முக்கிய துறைகளில் செயலாளராக பணியாற்றிய அனுபவமிக்கவர். கொரோனா காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத்துறை செயலாளராக இருந்தவர். அகால மரணம் அடைந்தது மிகுந்த வருத்தம் அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்