கட்டில், மெத்தை போன்ற இடங்களில் மறைந்திருந்து ரத்தம் உறிஞ்சும் மூட்டைப் பூச்சிகளின் தொல்லையை வீட்டுப் பொருட்களைக் கொண்டே எளிதாக விரட்ட சில வழிகள் உள்ளன. சூரிய வெளிச்சம் மற்றும் வெப்பம்: மூட்டைப் பூச்சிகள் வெளிச்சம் மற்றும் வெப்பத்திற்குப் பயப்படும். கயிற்றுக் கட்டில் போன்றவற்றை வெயிலில் போட்டு, ஒரு குச்சியால் தட்டினால் பூச்சிகள் வெளியே ஓடும். கொதிக்க வைத்த தண்ணீரை இடுக்குகளில் ஊற்றலாம்.
வேப்பிலை மற்றும் வேப்ப எண்ணெய்: கசப்புத் தன்மை கொண்ட வேப்பிலையை, பூச்சிகள் உலவும் இடங்களில் தூவி வைத்தால் விரட்டிவிடும். வேப்ப எண்ணெயில் தண்ணீர் மற்றும் பொடித்த கற்பூரத்தைக் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கட்டில், மெத்தை, சோபா இடுக்குகளில் தெளித்தால் பூச்சிகள் ஓடிவிடும்.
பேக்கிங் சோடா: மூட்டைப் பூச்சி அதிகம் வரும் இடங்களில் பேக்கிங் சோடாவைத் தூவி, ஒரு வாரம் அப்படியே விட்டுவிட்டால், அது காய்ந்து பூச்சிகள் இறந்துவிடும். பின்னர் அந்த இடத்தைச் சுத்தம் செய்யலாம்.
எசன்ஷியல் ஆயில்/புதினா: பூச்சிகளுக்கு நறுமணம் பிடிக்காது. 100 மில்லி தண்ணீரில் லாவண்டர் ஆயிலை 20 முதல் 30 சொட்டுகள் கலந்து ஸ்பிரே செய்யலாம். இதேபோல், புதினா இலைகளை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிப் படுக்கைக்கு அருகில் வைத்தாலும் பூச்சிகள் அண்டாது.
வினிகர்: வினிகருடன் சிறிது தண்ணீர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றைக் கலந்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, பூச்சிகள் வசிக்கும் இடங்களில் தெளித்தால், மூட்டைப் பூச்சிகள் அழியும். இந்தப் பொதுவான வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலம் மூட்டைப் பூச்சி தொல்லையிலிருந்து விடுபடலாம்.
