உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்துடன் முருகன் கோவிலுக்கு சென்ற நடிகை சுஜாவரணி.. வெளியான அழகிய பேமிலி போட்டோஸ்..

By Samrin

Updated on:

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.’

   

பிக் பாஸ் சீசன் 1′ போட்டியாளராக பங்கு பெற்று  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை  சுஜாவருணி.இவர் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி பிறந்தார்.  இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘பிளஸ் 2’ என்ற ஒரு படத்திற்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்படம் நடடிக்கும்போது இவருடைய வயது பதினான்கு.  அதன் பிறகு நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வர்ணஜாலம்’ இப்படத்தில் நடனமாடும் வாய்ப்பு சுஜாவுக்கு கிடைத்தது.இவர் மாயாவி ,பள்ளிக்கூடம்,குசேலன், ஜெயம்கொண்டான் உள்ளிட்ட  படங்களில்  சிறப்பு தோற்றத்தில்  நடித்தார்.

இவர் தமிழில் சத்ரு ,ஆண் தேவதை  இரவுக்கு ஆயிரம் கண்கள், முன்னோடி, அச்சயன்கள், குற்றம் 23 ,வைகை எக்ஸ்பிரஸ்  கிடாரி, கில்லாடி ,சதுரம் 2 ,மிளகா, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சுஜா வருணி 2021 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான’ ரவுடி பேபி’ என்ற போட்டியில் பங்கேற்பாளராக  கலந்து கொண்டார் .இவர் சித்தி 2 ,அன்பே வா ,போன்ற சன் டிவி சீரியல்களில் விருந்தினர் தோற்றத்தில்  நடித்துள்ளார்.

நடிகை சுஜா வர்ணி சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இவருக்கு அத்வைத் என்ற ஒரு மகனும் உள்ளார்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.

அடிக்கடி  புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சுஜாவரணி தன் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சென்று புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில்  தன் மகனுக்கு மொட்டை அடித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது தன்னுடைய  குடும்ப திருமண விழாவில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.