அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள கேட்லின்பர்க் பகுதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு விடுதிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து, பர்கர் பாக்கெட்டைக் கரடி ஒன்று காரின் கண்ணாடியை உடைத்துத் திருடிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காரின் உள்ளே ‘பர்கர் கிங்’ பாக்கெட் இருப்பதை மோப்பம் பிடித்த அந்தப் பெரிய காட்டுக்கரடி, உடனடியாகக் காரின் கண்ணாடியை உடைத்து கதவைச் சேதப்படுத்தி உள்ளே புகுந்தது. உணவைக் கையில் எடுத்தவுடன், தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றிலும் இருபுறமும் எட்டிப் பார்த்தவாறே பர்கருடன் தப்பியோடியது.
கார் கண்ணாடி நொறுங்கி கதவு பலத்த சேதமடைந்த போதிலும், மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. கரடியின் இந்தச் சுவாரஸ்யமான ‘பர்கர் திருட்டு’ சம்பவம் சமூக வலைதளங்களில் பயனர்களைப் பெரிதும் கவர்ந்து வைரலாகி வருகிறது.
