விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் இன்னும் மூன்று வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளது. இறுதி கட்டத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நெருங்கி வருவதால் எந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் அவர்களுடைய குடும்பத்தினரை வீட்டிற்குள் அனுப்பி வைத்து பிக் பாஸ் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அதனைப் போலவே சௌந்தர்யாவின் கிரஷ் விஷ்ணு, அருண் பிரசாத்தின் காதலி அர்ச்சனா, விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் பேச்சாளர் மகேஷ், பவித்ராவின் தோழி உட்பட ஒரு சில போட்டியாளர்கள் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர். இதனை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கொண்டாடினர். இப்படி மிகவும் மகிழ்ச்சியாக சென்றபோது எலிமினேஷன் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை ஜெஃப்ரி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து நேற்று யார் வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து போட்டியாளர் அன்ஷிதா நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிக் பாஸ் வீட்டில் இருந்த இவருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில் 84 நாட்களுக்கு மொத்தமாக 21 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…