Connect with us

நான் அந்த மாதிரி இல்ல.. வடிவேலுவுக்கு என் மேல இதனாலதான் கோபம்… கிசுகிசு மன்னன் பயில்வான் தம்பட்டம்!

CINEMA

நான் அந்த மாதிரி இல்ல.. வடிவேலுவுக்கு என் மேல இதனாலதான் கோபம்… கிசுகிசு மன்னன் பயில்வான் தம்பட்டம்!

 

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் சில வரிகளையும் பாடினார். இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் போன்ற இரு ஜாம்பவான்கள் இருந்த போதும் வடிவேலு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் விதமாக நடித்திருந்தார்.

இதையடுத்து சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசனோடு நடிக்கும் போது அவரின் உடல்மொழி பிடித்துப் போய் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தில் வாய்ப்பளித்தார். தேவர் மகன் படம் வடிவேலுவுக்கு ஒரு நல்ல பிரேக்காக அமைந்தாலும், இயக்குனர் வி சேகரின் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த ‘வரவு எட்டணா செலவு பத்தனா’, காலம் மாறி போச்சு, நான் பெற்ற மக்னே போன்ற படங்கள்தான் அவரை காமெடியில் உச்சம் தொட வைத்தன.

   

அதன் பிறகு கவுண்டமணி செந்திலும் மார்க்கெட்டும் டவுன் ஆக வடிவேலுவின் கொடி உயரப் பறந்தது. போட்டிக்கு விவேக் இருந்தாலும் அவரால் வடிவேலு அளவுக்கு உச்சம் தொட முடியவில்லை என்பதுதான் உண்மை. வடிவேலு மார்க்கெட் ஏற ஏற அவரின் கர்வமும் அதிகமானது. கூட நடிக்கும் நடிகர்களை மதிக்காதது, தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிவிட்டு இழுத்தடிப்பது, கால்ஷீட் கொடுத்துவிட்டு ஷூட்டிங் வராதது என அவரின் அட்ராசிட்டி அதிகமானது.

அதே போல தன்னோடு நகைச்சுவை காட்சிகளில் நடிப்பவர்களையும் அவமரியாதையாக நடத்துவது, அவர்களுக்கு வேண்டுமென்றே சம்பளத்தைக் குறைவாகக் கொடுப்பது என செய்துள்ளார். அவரோடு சில படங்களில் இணைந்து நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார் பயில்வான் ரங்கநாதன். அவர்கள் காம்பினேஷன் நன்றாக வேலை செய்தாலும் அவரை தொடர்ந்து வடிவேலு பயன்படுத்தவில்லை.

இதற்கு அவருக்குத் தன் மேல் உள்ள கோபம்தான் காரணம் என்று பயில்வான் கூறியுள்ளார். மேலும் “வடிவேலுவுக்கு என் மேல் ஏன் கோபம் என்றால், நான் அவர் வீட்டுக்கு சென்றெல்லாம் சான்ஸ் கேட்கமாட்டேன். ஆனால் மற்றவர்கள் அவர் வீட்டில் காத்துக் கிடப்பார்கள். நான் அவருக்கு கும்பிடு போட்டு குழையாததுதான் அவருக்கு பிடிக்கவில்லை. நான் சினிமாவில் பாக்யராஜ் தவிர வேறு யாரிடமும் சென்று சான்ஸ் கேட்டதில்லை” என தனது அருமை பெருமைகளைப் பேசியுள்ளார்.

Continue Reading
To Top