தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நகைச்சுவைz குணசித்திரம், கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் விசித்திரா. விசித்திர இயக்குனர் பிரதாப் போத்தனின் ஆத்மா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. தமிழில் முத்து, ரசிகன், சுயம்வரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் விசித்ரா நடித்துள்ளார். திருமணமான பிறகு விசித்ரா நடிப்பை விட்டு விட்டு பூனேவில் தங்கி விட்டார்.

இதனை தொடர்ந்து சன் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் மாமி சின்ன மாமி, வாழ்க்கை, ராசாத்தி, ஆனந்தி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விசித்ரா குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். இப்போது பிரபல பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்ரா போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

திரை விமர்சகரான பயில்வான் நடிகைகள், நடிகர்களின் வாழ்க்கை குறித்து பேசி பிரபலமானார். சமீபத்தில் பயில்வான் அளித்த பேட்டியில் எனக்கு பிடித்த கவர்ச்சி நடிகை விசித்ரா தான். ஆடல் பாடல் என்றால் சில்க் ஸ்மிதா தான். ஆனால் எனக்கு என்னவோ விசித்ரா தான் ரொம்ப பிடிக்கும். அந்த காலத்தில் கவர்ச்சி வில்லி, நாயகி என்றாலே விசித்ரா தான் ஞாபகம் வரும்.இளசுகளுக்கும் கவர்ச்சி தேவை; பெருசுகளுக்கும் கவர்ச்சி தேவை என பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram
