1980 ஆம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் அறிமுகம் ஆனவர் வைரமுத்து. அப்போது இளையராஜாவுக்கும் அவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.
அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.
ஆனாலும் ரஹ்மானின் வருகைக்குப் பிறகு வைரமுத்து தனது செகண்ட் இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கி இப்போது வரை முன்னணி பாடல் ஆசிரியராக இருக்கிறார். ஆனால் அவர் இத்தனை ஆண்டுகள் சேர்த்து வைத்த புகழை அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஒரே நாளில் வீழ்த்திவிட்டன. முதலில் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டை வைத்தவர் பாடகி சின்மயிதான். அவர் தொடர்ந்து வைரமுத்துவின் அத்துமீறல்களைப் பட்டியலிட்டு அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லிவந்தார். இதனால் வைரமுத்து சினிமாவில் பாடல்கள் எழுதும் வாய்ப்புகளை இழந்துள்ளார்.
சமீபத்தில் சுசித்ரா வைரமுத்து மீது சொன்ன குற்றச்சாட்டு மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்க வழிவகுத்துள்ளது. இதுபற்றி தற்போது பேசியுள்ள சினிமா கிசுகிசு மன்னன் பயில்வான் ரங்கநாதன் “வைரமுத்து பற்றி சுசித்ரா சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கலாம். உங்களுக்கு ஒன்று தெரியுமா வைரமுத்துவின் மனைவி பொன்மணி அவரோடு இப்போது இல்லை. அதே போல அவரது மகன்களு அவரோடு மனம் விட்டுப் பேசுவதில்லை. இதெலலாம் எதனால் என்று நினைக்கிறீர்கள்?” எனப் பற்றவைத்துள்ளார். அவரது மகன்களான மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்து ஆகிய இருவரும் வைரமுத்துவோடு நெருக்கமாக இல்லை என்றாலும் பொது வெளியில் அவ்வாறு காட்டிக் கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.