தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காக பரவி வரும் ஒரு செய்தி ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து செய்தியாகும். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் ஜெயம் ரவி எடுத்த இந்த முடிவு பலரை அதிர்ச்சிக்கு உள்ள்ளாக்கியுள்ளது.

தனுஷ், ஜிவிபிரகாஷ் ஆகியோர் வரிசையில் தற்போது ஜெயம் ரவி விவாகரத்து செய்து இருப்பது தமிழ் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என பலர் விவாதித்து வருகின்றனர். இது சம்பந்தமாக பயில்வான் ரங்கநாதன் பல சர்ச்சையான செய்திகளை கூறியிருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது என்னவென்றால் ஆர்த்தியின் தாயார் ஆன சுஜாதா விஜயகுமார் பிரபல ப்ரொடியூசர். இவரின் ப்ரொடக்ஷனில் ஜெயம்ரவியை நான்கு படங்கள் நடித்திருக்கிறார். அப்படி பாண்டியராஜ் ஒரு கதையை சுஜாதா விஜயகுமாரிடம் கொண்டு வந்திருக்கிறார். எல்லாம் பிடித்து ஓகே செய்யவே ஜெயம் ரவி தனது மாமியாரிடம் 20 கோடி சம்பளம் கேட்டாராம். இந்த சம்பளப் பிரச்சினையினால் படம் கைநழுவி போனது.

இதனால் மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே பல நாட்கள் பிரச்சனை நடந்து வந்துள்ளதாகவும் தனுஷ் ஆர்த்தி இடையே கேலி கிண்டல் செய்வது போன்ற சிறு பிரச்சனை நடந்ததால் ஜெயம் ரவிக்கும் தனுஷுக்கும் தகராறு இருப்பதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். மேலும் தனது மாமியார் தனது சம்பளம் தரவில்லை என்ற புகைச்சலால் அது ஒவ்வொரு தருணத்திலும் மென்மேலும் வளர்ந்து சண்டை பெரிதாகி இருக்கலாம். எப்படியும் ஆர்த்தி தனது அம்மாவிற்கு தான் சப்போர்ட் செய்வார் எந்த மகளும் அதைத்தான் செய்வார் அதனால கூட பிரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
