சீனு ராமசாமியின் திடீர் விவாகரத்து முடிவுக்கு இதுதான் காரணமா?.. கொளுத்திப்போட்ட பயில்வான் ரங்கநாதன்..!

By Nanthini on மார்கழி 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் எழுத்தாளராக, கவிஞராக இலக்கிய உலகில் அறியப்படும் முக்கியமான நபராகவும் திகழ்கிறார். இவருடைய எழுத்தில் வெளியான கவிதை தொகுப்பில் இவருடைய சினிமாவைப் போல் உலகத்தை அவரது பார்வையில் எழுதியுள்ளார். குறிப்பாக காற்றால் நடந்தேன் என்ற கவிதை தொகுப்பு இவருடைய பால்ய காலங்களை பற்றி மிகவும் சுவாரசியமாக எடுத்துரைத்திருந்தது. இவை வாசகர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. சீனு ராமசாமியை பொருத்தவரை தமிழ் சினிமாவில் பாராட்டப்படும் இயக்குனர்களில் ஒருவர். தென் தமிழ்நாட்டை குறிப்பாக ராமநாடு பகுதியை தன்னுடைய சினிமா மூலமாக அந்த மண்ணின் மக்களையும் மண்ணையும் அரங்கேற்றியவர்.

Seenu Ramasamy Divorce: 17 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு.. விவாகரத்தை அறிவித்த சீனு ராமசாமி! | Director Seenu Ramasamy Announced Divorce With His Wife GS Dharshana Fans Getting Shock - Tamil ...

   

சமீபத்தில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனு ராமசாமி குறித்து இதுவரை எந்த ஒரு கிசுகிசுவும் வந்தது கிடையாது. இப்படியான நிலையில் சீனு ராமசாமி தனது மனைவியை விவாகரத்து செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், சீனு ராமசாமி தனது மனைவியை விவாகரத்து செய்ய ஒரே ஒரு விஷயம் தான் முக்கிய காரணமாக இருக்கும். அது சினிமாக்காரர்களின் மனைவிகளுக்கு சினிமாவைப் பற்றி எந்த விஷயமும் தெரியாதது தான். அவர்களுக்கு பாடி டிமாண்ட் இருக்கும், தொழில் ரீதியான வலிகளும் இருக்கும். ஆனால் அதையெல்லாம் மனைவிகள் புரிந்து கொள்வதில்லை.

   

இயக்குநர் சீனு ராமசாமி விவாகரத்து

 

சினிமா வட்டாரத்தில் உள்ள நடிகர்கள் இயக்குனர்கள் தங்களுடைய மனைவி மீது அன்பு செலுத்த நேரமில்லாமல் போகலாம். இதனை மனைவிகள் புரிந்து கொண்டால் மட்டுமே சினிமாக்காரர்களாக இருந்தாலும் இயக்குனர்களாக இருந்தாலும் அவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் சீனு ராமசாமி எப்போதுமே அலுவலகத்தில் தான் இருப்பாராம். இதுதான் விவாகரத்திற்கான முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. சமீபகாலமாகவே சீனு ராமசாமி ப்ரொடக்ஷன் ஆபீஸில் தங்கி விடுவதாக கூறப்படுகிறது. சரியாக வீட்டிற்கு செல்வதில்லை.

வீட்டுக்கே போறதில்ல!.. இளம் நடிகைக்கு டார்ச்சர்.. சீனு ராமசாமி விவாகரத்தின் பின்னணி..!

பல வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகை இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். 2013 ஆம் ஆண்டு இடம்பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது அந்த படத்தில் நடித்திருந்த மனிஷா யாதவை சீனு ராமசாமி பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் அதற்கு அவரிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. பொத்தாம் பொதுவாக சீனு ராமசாமி மீது மனிஷா பாலியல் புகாரை வைத்திருந்தார். சினிமாக்காரர்களை வீட்டில் இருக்கும் மனைவிகள் சரியாக புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்துப் போனால் இது போன்ற முடிவுகள் வராமல் இருக்கும் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.