#image_title
தமிழ் சினிமாவில் நல்ல கதைகளுக்கு வறட்சி என்பது இயக்குநர்கள் எடுக்கும் பல படங்களில் அப்படியே வெளிப்படுகிறது. இது இன்று, நேற்று அல்ல, பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தனது படங்களுக்கு சொந்தமாக டைட்டில் அதாவது தலைப்பு வைக்கவே தெரியாமல், பழைய படங்களில் டைட்டில்களை எடுத்து வைக்கின்றனர். அல்லது படத்தில் நடிக்கும் ஹீரோ பெயரையே படத்தின் டைட்டிலாக வைக்கின்றனர். அவர்களிடம் புத்தம் புதிய கதையை எதிர்பார்த்தால், ரசிகர்களை திருப்திப்படுத்த அவர்கள் எடுத்துவரும் அரிய, புதிய முயற்சிதான் ஈயடிச்சான் காப்பி.
வழக்கமாக 40, 50 ஆண்டுகளுக்கு முன்வந்த பழைய படங்களில் இருந்துதான் முதலில் கதையை காப்பியடித்தனர். இப்போது உள்ள இயக்குநர்கள் இன்னும் அதில் அட்வான்சாகி, ஹாலிவுட் படங்களின் கதைகளை காப்பியடிக்கின்றனர். இதில் சிறந்த முன்னோடிகளாக லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லி, சுந்தர் சி, மணிரத்னம், கவுதம் மேனன் போன்றவர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது அயலான் பட இயக்குநர் ரவிக்குமாரும் சேர்ந்துக்கொண்டார்.
வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள அயலான் படத்தின் கதை கடந்த 2011ல் வெளியான ஹாலிவுட் படம் Paul என்ற படத்தின் கதைதான் என தெரிய வந்துள்ளது. அயலான் படத்தில் வரும் ஏலியன் பொம்மையும், Paul ஹாலிவுட் படத்தில் வரும் ஏலியன் பொம்மையும் ஒன்றுபோலவே இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அயலான் படத்தின் டீசரும் Paul படத்தின் டீசரும் ஏறக்குறைய ஒன்றுபோல இருப்பதாகவும் உறுதியாகி உள்ளது.
பள்ளிகளில், படிப்பு மண்டையில் ஏறாத சில மாணவ, மாணவியர் தேர்வு நேரங்களில் பக்கத்தில் எழுதிக்கொண்டிருக்கும் அடுத்த மாணவர் எழுதுவதை பார்த்து காப்பி அடித்து எழுதுவர். அதுபோல் மண்டையில் சொந்த சரக்கு இல்லாத தமிழ் சினிமா இயக்குநர்கள், இப்படி காப்பியடித்து படம் எடுத்து கோடி, கோடியாக சம்பாதிக்கின்றனர். ஆனால் சொந்தமாக இவர்களை இந்த கதையை உருவாக்கியவர்கள் போல, பிரமோ நிகழ்ச்சிகளில் பில்டப் செய்வதை பார்த்தால்தான், காமெடியாக இருக்கிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…