இயக்குனர் ஆர். எஸ், துரை செந்தில் குமார் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பட்டாஸ்’இப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் தனுஷ், சினேகா, நவீன், சந்திரா, நாசர், மெஹ்ரீன் பிர்சாடா, நவீன் சந்திரா, கே பி ஒய் சதீஷ், கே பி ஒய் கோதண்டம் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் சாதனா ஷாவாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர். நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. இவர் பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்டவர்.

தனது பத்து வயதில் தனது முதல் ராம்ப் வாக் செய்து அழகுப் போட்டியில் ‘கசௌலி இளவரசி’ என்ற பட்டத்தை வென்றார். இவர் 2013 ஆம் ஆண்டு மாடலாக தனது பயணத்தை தொடங்கினார்.

இவர் கனடா மற்றும் இந்தியாவில் பல வணிக விளம்பரங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கிருஷ்ண காடி வீர பிரேம’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகிலும் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து இவர் பில்லாரி, மஹானுபாவுடு, பாந்தம், நோட்டா, கவசம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். அடிக்கடி போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்3.5 மில்லியன் ஃபாலோவர்சை வைத்துள்ளார். தற்போது இவர் கருப்பு நிற மார்டன் உடையில் ஹாட் கிளிக்ஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

