actor Rajinikanth

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு மகனாக நடிக்க கமிட் ஆன நடிகர்… அட இவரா என ஷாக் ஆன தமிழ் சினிமா ரசிகர்கள்!

By Elango on மாசி 25, 2026

Spread the love

ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். வரும் ஏப்ரலில் ஷூட்டிங் துவங்க உள்ளது. குடும்ப டிராமாவாக பொழுதுபோக்கு படமாக இது உருவாகிறது. சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

பொதுவாகவே ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான் ஹீரோக்களின் படங்களில் நடிப்பது இன்றைய இளம் நடிகர்களின் ஒரு பெரிய கனவாகவே இருக்கும். சம்பளம் இல்லாமல் கூட ஒரு காட்சியில் ரஜினி கமலுடன் நடித்தால் போதும் என்பார்கள். இப்போது அந்த அதிர்ஷ்டம் மலையாள நடிகர் மற்றும் இயக்குனர் பசில் ஜோசப்புக்கு அமைந்துள்ளது. தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு மகனாக பசில் ஜோசப் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். இவர் பராசக்தி படத்திலும் சில காட்சிகளில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.