பிரபல சீரியல் நடிகையை காதலிக்கும் ‘பசங்க’ பட சிறுவன்!… விரைவில் திருமணம் செய்து கொள்ள ஆசை!… அவரே வெளியிட்ட வைரல் பதிவு இதோ!…

By Begam

Published on:

‘பசங்க’ பட நடிகரான கிஷோர் பிரபல சீரியல் நடிகை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் தயாரிப்பில் 2009ல் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘பசங்க’. இத்திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனர் பாண்டியராஜ் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் அன்பு  கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர் கிஷோர். அந்த வருடத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

   

‘பசங்க’ திரைப்படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015ல் ‘பசங்க 2’ திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பசங்க திரைப்படத்தில் நடித்த நடிகர் கிஷோருக்கு சமீபத்தில் தமிழ்நாடு அரசின் விருதும், தேசிய விருதும் வழங்கப்பட்டது.

தற்பொழுது நடிகர் கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தி காதலிப்பதாக கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி.

இதைத்தொடர்ந்து லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல, கோபுரங்கள் செய்வதில்லை என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய நடிகர் கிஷோர் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும், தனது காதலை பகிரங்கமாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

வைரலாகும் பதிவு இதோ!…