வங்கி கடன் தள்ளுபடி.. தமிழக மக்களே சந்தோஷமான செய்தி வந்தாச்சு..!!

By Soundarya on மாசி 6, 2026

Spread the love

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வரும் நிலையில், கூட்டுறவு வங்கி கடன்கள் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. 2025 டிசம்பர் மாத நிலவரப்படி, தமிழக கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட மொத்த கடன் தொகை சுமார் ₹85,000 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த காலங்களில் வழங்கப்பட்ட விவசாயக் கடன்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை முன்மாதிரியாகக் கொண்டு, தேர்தல் நேரத்தில் புதிய அறிவிப்புகள் வரலாம் என்ற நோக்கில் பொதுமக்கள் தற்போது ஆர்வமுடன் கடன் பெற்று வருகின்றனர்.

தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், குடும்பச் செலவுகள் மற்றும் திருமணத் தேவைகளுக்காகக் குறைந்த வட்டியில் ₹10 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டங்கள் குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது கூட்டுறவு வங்கிகள் மூலம் வீட்டு வசதி, கல்வி மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கு ஏற்கனவே பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.