குஷியோ குஷி..! வங்கி கடன் அபராதம் தள்ளுபடி.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!

By Soundarya on தை 30, 2026

Spread the love

வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 2026 ஜனவரி 1 முதல், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் பெறப்பட்ட வீட்டுக் கடன்களை முன்கூட்டியே அடைப்பவர்களிடம்  எந்தவித அபராதக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளது. வழக்கமாக 2% முதல் 4% வரை வசூலிக்கப்பட்டு வந்த இந்த அபராதக் கட்டண ரத்து, புதிய மற்றும் புதுப்பிக்கப்படும் கடன்களுக்குப் பொருந்தும்.

இந்த அதிரடி மாற்றமானது தனிநபர்கள் மற்றும் குறு, சிறு நிறுவனங்கள் பெறும் கடன்களுக்குப் பொருந்தும் என ரிசர்வ் வங்கி (RBI) தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், ஃபிக்சட் வட்டி விகிதத்தில் (Fixed Rate) கடன் வாங்கியவர்களுக்கு இந்த அபராதக் கட்டண விலக்கு பொருந்தாது. இந்த புதிய விதிமுறை கடன் வாங்குபவர்கள் தங்களின் கடன் சுமையை விரைவாகக் குறைக்கவும், வங்கிகளிடையே வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.