இனி 4 நாமினிகள்…. இன்று (நவ..1) முதல் அமல்… வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 1, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே வங்கி கணக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிறிய வரவு செலவுக்கு கூட வங்கி கணக்கு என்பது அவசியமானதாக உள்ளது. அதேசமயம் தற்போது பலரும் எதிர்காலத்தை எண்ணி சேமித்து வருவதால் வங்கி கணக்கை பயன்படுத்துகின்றனர்.

இப்படியான நிலையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நாமினிகளை நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் இன்று நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒருவர் தனக்கு நான்கு நாமினிகள் வரை நியமிக்கலாம். அந்த நான்கு பேரில் யார் முதன்மை நாமினி, யாருக்கு எவ்வளவு சதவீதம் பங்கு என்பதையும் நிர்ணயிக்கலாம். டெபாசிட், லாக்கர், லாக்கரில் வைக்கும் பொருள்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.