வங்கதேசத்தில் இந்து விதவைப் பெண்ணை இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் மரத்தில் கட்டி போட்டு அவருடைய தலை முடியை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்முடைய அண்டை நாடான வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கடந்த வருடம் பொறுப்பேற்றது. அப்போது முதல் அந்த நாட்டில் இந்து மக்கள் மீது தொடர்ந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக இந்த தாக்குதல் கொடூரமாக மாறி உள்ளது.
இந்துக்கள் மீதான இந்த வன்கொடுமைகளை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் யூனுஸ் கண்டும் காணாதது போல இருக்கின்றார். இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக வங்கதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க இந்து விதவை பெண் ஒருவரை இரண்டு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அவரின் தலை முடியை வெட்டி உள்ளனர். இந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சமீபத்தில் இந்து இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
