பெங்களூரில் மெட்ரோ ரயில் உயிர்காக்கும் சேவையாக மாறிய சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. பெங்களூரின் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நோயாளிக்கு உடனடி இதயம் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அந்த சமயத்தில் மற்றொரு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த ஒருவரின் இதயம் தானமாக கிடைத்ததால் இந்த இதயம் குறித்த நேரத்திற்குள் மாற்றப்பட வேண்டும் என்பதால் மிகப்பெரிய சவாலாக இருந்தது. சாதாரணமாக மருத்துவமனைகளுக்கு இடையேயான பயணம் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்கும். ஆனால் மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷன் உடனடி உதவியால் இந்த உயிர்காக்கும் பயணம் வெறும் 20 நிமிடங்களில் முடிந்தது.
யஸ்வந்த்பூர் மெட்ரோ நிலையத்திலிருந்து புறப்பட்ட மருத்துவ குழுவினர் ஏழு ரயில் நிலையங்களை கடந்து சாம்ராஜியம் சதுக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தை சென்றடைந்தனர். இது முதல்முறை கிடையாது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தானம் செய்யப்பட்ட கல்லீரலையும் மெட்ரோ வழியை கொண்டு செல்லப்பட்டு ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது. இதன் மூலமாக மெட்ரோ ரயில் பெரும் போக்குவரத்து வசதி அல்லாமல் உயிர்காக்கும் பயணம் என்பதையும் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த அதிசயமான முயற்சி பெங்களூரு மக்களின் பெருமையை உணர்த்துவது மட்டுமல்லாமல் அவசர நிலைகளில் பொது போக்குவரத்து எவ்வளவு முக்கிய பங்காற்ற முடியும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…
புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…
கல்லூரி வளாகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் தந்தை அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த இருக்கையில் அவருடைய மகளும், மகளுக்கு…