பொதுவாகவே நம்முடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய மிகப்பெரிய நிகழ்வுகள் அனைத்தும் சத்தம் இல்லாமல் அமைதியாக தான் நடக்கின்றன. பெங்களூரை சேர்ந்த ஒரு இளம் தம்பதி குழந்தையை தத்தெடுத்த தங்களுடைய உணர்ச்சிகரமான பயணத்தை ஒரு வீடியோவாக பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில் ஒரு தம்பதியின் நீண்ட கால காத்திருப்பு, நம்பிக்கை மற்றும் அன்பின் ஆவணம் வெளிப்படுகிறது. குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்த அந்த முதல் நிமிடம் முதல் குழந்தையை கையில் வாங்கிய தருணம் வரை ஒரு அழகான பதிவை பகிர்ந்துள்ளனர்.
தம்பதியினர் ஒன்றாக அமர்ந்து தங்களுக்கு ஒரு குழந்தை கிடைக்க வேண்டும் என கடவுளிடம் உருக்கமாக வேண்டிக் கொள்ளும் காட்சி உடன் அந்த வீடியோ தொடங்குகின்றது. அடுத்ததாக குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் தர்மபுரிக்கு காரில் செல்கின்றனர். அந்தப் பயணத்தில் அவர்களின் முகத்தில் இருக்கும் எதிர்பார்ப்பும் படபடப்பும் தெரிகிறது. அனைத்து சட்டபூர்வ ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு ஒரு பாதுகாவலர் அந்த குழந்தையை தம்பதியிடம் ஒப்படைக்கின்றார்.
அந்த ஒரு நொடிக்காகவே வாழ்நாள் முழுவதும் காத்திருந்தது போல தம்பதியினர் குழந்தையை தழுவி கொள்கிறார்கள். பல ஆண்டுகால இயக்கத்தை துடைத்தெறிந்த தருணம். அந்த குழந்தைக்கு அவர்கள் அடா Ada என்று பெயரிட்டுள்ளனர். குழந்தையை தத்தெடுத்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தம்பதி பகிர்ந்து உள்ள செய்திதான் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
ஒரு மனிதனாக நாம் செய்யக்கூடிய மிக அழகான விஷயங்களில் ஒன்று குழந்தையை தத்தெடுப்பது. அது ஒரு நல்ல செயல் என்பதற்காகவோ அல்லது தத்தெடுப்பது பெருமையானது என்பதற்காகவோ இதனை சொல்லவில்லை. அது நம்மை உள்ளுக்குள் இருந்து முழுமையாக மாற்றி அமைப்போம். நாம் அனைவரும் இறைவனால் தத்தெடுக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையவாசிகளை கவர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…
மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…