அத்தை, மாமா பிள்ளைகளை திருமணம் செய்ய தடை… இது தான் காரணமாம்.. உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்வீடனின் அதிரடி மசோதா..!!

By Soundarya on ஆனி 15, 2026

Spread the love

ஸ்வீடன் அரசு, அத்தை அல்லது மாமா பிள்ளைகளையோ அல்லது நெருங்கிய சொந்தங்களிலோ திருமணம் செய்து கொள்வதற்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதற்கான மசோதா அந்நாட்டின் பார்லிமென்டில் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தமானது வரும் ஜூலை 1 முதல் முழுமையாக அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறப்புக் குறைபாடுகள் மற்றும் குடும்ப அழுத்தங்களைத் தடுப்பதற்கே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியாக மரபணு ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

   

இந்தச் சட்டம் குறித்த விவாதம் தற்போது உலகளவில் பரவி வரும் வேளையில், இந்தியாவிலும் இது போன்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சட்டம் பெரும் வரவேற்பையும் அதே சமயம் சில விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.