தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன. அவர் இயக்கிய அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன.
இடையில் பாலு மகேந்திரா இயக்கிய சில படங்கள் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. அதனால் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். அப்போது அவருடன் பணியாற்றிய கமலஹாசன் மற்றும் சில்க் ஸ்மிதா போன்றவர்கள் அவருக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்துள்ளனர்.
90 களின் இறுதியில் பாலு மகேந்திரா கிட்டத்தட்ட திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பை இழந்தார். அதனால் தொலைக்காட்சியில் கதை நேரம் என்ற பெயரில் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை சினிமாவாக எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் சில படங்களை இயக்கினாலும் அவை பெரியளவில் கவனம் பெறவில்லை. அதன்பின்னர் அவரின் உதவி இயக்குனர்கள் அடுத்தடுத்து படங்களை இயக்கி அவருக்கு பெருமை சேர்த்தனர்.
அதுதான் இப்போது வரை அவருடைய சாதனைகளாகப் பார்க்கப்படுகின்றன. அவரிடம் இருந்து இயக்குனர்கள் மட்டும் வரவில்லை. அறிவுமதி மற்றும் நா முத்துக்குமார் ஆகிய ஒரு பாடல் ஆசிரியர்களும் வந்துள்ளனர். முத்து குமார் இயக்குனர் ஆகவேண்டுமென்ற ஆசையோடுதான் சினிமாவுக்கு வந்து பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். அப்போது அவருடன் பணியாற்றிய சக உதவி இயக்குனர்தான் வெற்றிமாறன்.
ஆனால் ஒரு கட்டத்தில் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்ததும் அவர் பாலு மகேந்திராவை விட்டு சென்றுவிட்டார். அது பற்றி பாலு மகேந்திரா கோபத்தோடு பேசினாராம். வெற்றிமாறன் தன்னுடைய மைல்ஸ் டு கோ புத்தகத்தில் இதுபற்றி “அவன் தனக்கு இயக்குனராகும் ஆளுமை இல்லை என்று நினைக்கிறான். அவன் மேல் அவனுக்கே நம்பிக்கை இல்லை. அவனை நாம் என்ன செய்ய முடியும். அவன் பாடல் ஆசிரியனாகவே வரட்டும்” என்று சொன்னாராம். ஆனால் முத்து குமாரின் முதல் ஹிட் பாடல் பாலுமகேந்திராவின் ஜூலி கணபதி படத்தில் இடம்பெற்ற ‘எனக்குப் பிடித்த பாடல்’ என்ற பாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…