Categories: சினிமா

பொருளாதார நெருக்கடியில் இருந்த பாலு மகேந்திரா… பார்வையாலே கண்டுபிடித்த கமல்… அதுக்கப்புறம் நடந்ததுதான் ஹைலைட்..

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன.

தமிழ் திரையுலகில் பாலுமகேந்திராவின் திறமையை முதலில் அறிந்தவர்களில் ஒருவர் கமல்ஹாசனும் ஒருவர். தான் உதவி நடன இயக்குனராக பணியாற்றிய ஒரு படத்துக்கு தற்காலிக ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திரா வந்த போது அவரின் வேலை செய்யும் பாணியை பார்த்து வியாந்து, அவரோடு மணிக்கணக்கில் பேசிக் கொண்டு இருந்ததாக பின்னர் ஒருமுறை கூறியுள்ளார்.

அதே பாலு மகேந்திரா முதல் முறை இயக்குனர் அவதாரம் எடுத்த கோகிலா படத்தில் கதாநாயகனாக நடித்ததும் கமல்ஹாசன். அவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்த மூன்றாம் பிறை திரைப்படம் இன்றளவும் திரைப்பட ரசிகர்களால் சிலாகிக்கப்படும் ஒரு படமாக உள்ளது.

இடையில் பாலு மகேந்திரா இயக்கிய சில படங்கள் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. அதனால் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். யாரிடமும் பணம் கடன் கேட்க விரும்பாதவரான பாலு மகேந்திரா வேறு வழியில்லாமல் கமலிடம் கேட்கலாம் என முடிவு செய்துள்ளார்.

கமல் அலுவலகத்துக்கு வந்த பாலு மகேந்திராவை உற்சாகமாக வரவேற்று அமரச் சொன்னார் கமல். பாலுமகேந்திரா, தான் பணம் கேட்க வந்திருக்கும் விஷயத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் முன்… உலக சினிமாக்கள் பற்றி சுவாரசியமாக பேச ஆரம்பித்துள்ளார் கமல். பாலு மகேந்திராவும் அவரோடு பல மணிநேரம் சினிமா பற்றி பேசியுள்ளார்.

ஆனாலும் பாலுமகேந்திராவின் மனதுக்குள் எப்போது எப்படி பணத்தை கேட்பது என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது கமல் பேச்சை நிறுத்திவிட்டு “அடடே… பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை. நான் ஷூட்டிங் போக வேண்டுமே..! கொஞ்சம் இருங்கள், வந்துவிடுகிறேன்.” எனக் கூறியுள்ளார். பாலு மகேந்திராவும் அவரிடம் பணத்தை எப்படி கேட்பது எனத் தெரியாமல் இருந்த போது கமல் விறுவிறுவென கையில் ஒரு கவரோடு வந்து அதை பாலு மகேந்திராவிடம் கொடுத்துள்ளார்.

அப்போது நெகிழ்ந்து போயிருந்த பாலுமகேந்திராவிடம் “இது கடன் இல்லை சார். நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்.” எனக் கூறி சென்றுள்ளார். அப்படி அவர்கள் இணைந்து உருவாக்கிய படம்தான் சதி லீலாவதி.

vinoth

Recent Posts

நிலநடுக்கத்தால் வந்த சோதனை…. டெல்லியில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்…. கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி…. நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

டெல்லியின் நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளே ஐந்து மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில்…

3 minutes ago

சென்னையில் அதிர்ச்சி…. டைடல் பார்க் அருகே சாலையில் திடீரென உருண்ட சொகுசு கார்…. வைரலாகும் பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

சென்னையில் உள்ள முக்கிய மற்றும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான திருவான்மியூர் டைடல் பார்க் அருகே, திடீரென சாலையில் பெரிய பள்ளம்…

9 minutes ago

“ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்”..! டிக்கெட் இல்லாம போலாமா?… கைதியோடு ஏறிய போலீஸ்… இறக்கிவிட்ட RPF… நடுவழியில் நடந்த பகீர் வாக்குவாதம்…!!

கைதி ஒருவரை அழைத்துக்கொண்டு ரயிலில் பயணித்த ராஜஸ்தான் மாநிலக் காவலர்களுக்கும், ரயில்வே பாதுகாப்புப் படை வீரருக்கும் இடையே முறையான பயண…

13 minutes ago

நடுவானில் உறைந்துபோன நிமிடங்கள்…. “நான் சாக விரும்பல” கதறிய பைலட்…. 45 நிமிடம் போராடி உயிர் மீட்ட ஜார்ஜிய டாக்டர்….!

ஃபிளை துபாய் விமானத்தில் நடுவானில் திடீரென ஏற்பட்ட விபத்து அல்லது உடல்நலக்குறைவால் கடுமையாகக் காயமடைந்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை,…

15 minutes ago

நொடியில் தலைகீழான பயணம்… காரை அடித்து நொறுக்க முயன்ற கொடூரன்… நடுங்கி கதறிய சிறுமி… சீறிய தாய்… சாலையில் நடந்த பயங்கரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் தனது சிறுமி மகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பெண், நடுவழியில் எதிர்பாராத…

23 minutes ago

பிரியாணி காதலால் கைவரிசை… ஆயுள் தண்டனை கைதி அபிராமிக்கு ஷாக் கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்…. சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு…..!

குன்றத்தூரில் தனது குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அபிராமியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

31 minutes ago